ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
18-வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 25-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை அணியின் கேப்டனாக இருந்த ருத்துராஜ் கெய்குவாட் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில், மகேந்திர சிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ள சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், கேப்டன் தோனி வழிகாட்டுதலின் கீழ் புதிய உத்வேகத்துடன் சென்னை அணி களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அதே நேரத்தில், இரு வெற்றிகளை மட்டுமே தன்வசப்படுத்தியுள்ள கொல்கத்தா அணியும் இன்று துடிப்புடன் விளையாடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது எனக் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.