சேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்து கொண்டு பாடல் பாடியும் நடனமாடியும் அசத்தினார்.
சேலம் மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்றது திருவிழாவில் நிறைவாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல நடிகையும் பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார் தொடர்ந்து நடன கலைஞர்களுடன்
குத்தாட்டம் போட்டு நடனமாடி அசத்தினார்
அப்பொழுது அங்கு இருந்த கிராமத்தை சேர்ந்த பெண் குழந்தைகள் பாடல் பாட வேண்டும் என்று கேட்ட நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து பாடல் பாடினார். தொடர்ந்து நடனம் ஆட வேண்டும் என்று கேட்ட நிலையில் குழந்தைகளுடன் சேர்ந்து திரை இசை பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனம் ஆடினார்.
குழந்தைகளின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நடிகை திணறினார். நடிகையின் நடனத்தை காண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்தனர்.
தொடர்ந்து அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நடிகையின் நடனத்தால் அந்த கிராமமே திருவிழா கோலம் பூண்டது.