உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்றின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலம், ஈபிள் கோபுரத்தை விட சுமார் 35 மீட்டர் உயரம் கொண்டதாகும்.
இந்த பாலம் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள நிலையில், செனாப் ரயில் பாலத்தை வரும் 19ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ரயில்வே வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.