நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவரானார் . அவரது அரசியல் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
நெல்லை மாவட்டம் பணகுடியை பூர்விகமாகக் கொண்ட நயினார் நாகேந்திரன் 1989ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
பணகுடி அதிமுக நகரச் செயலாளர் பொறுப்பில் திறம்படச் செயல்பட்டதால் அவரை அதிமுக நெல்லை மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா நியமித்தார்.
2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.
முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
2006 சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் தோல்வியைத் தழுவிய நயினார் நாகேந்திரன் 2011 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவிலிருந்து விலகி நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார் .
இதையடுத்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் பாஜக மாநில தலைவர் பதவிக்கு விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், வேறு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார்.