இந்திய வரலாற்றில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 70 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.