கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூமரத்துகுழி, அட்டப்பல்லம், ஜீவா நகர்,மாக்கண் கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திவரும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவ தேவை மற்றும் கல்வி நிலையங்கள் செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் சட்ட மன்ற உறுப்பினர் தலையிட்டு புதிய சாலையை அமைத்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.