எந்த ஒரு சித்தாந்தத்தையும் பின்பற்றாமல் தேசத்தை மட்டும் முன்னிறுத்தும் தொலைக்காட்சியாக, தமிழ் ஜனம் செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் 2ஆம் ஆண்டு விழாவில் பேசியவர்,
வித்தியாசமான பாதையில் பயணிக்கிறது தமிழ் ஜனம் தொலைக்காட்சி என்றும் 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த நாள் முக்கியமான நாளாக இருக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
வக்பு வாரியங்கள் குறித்து தமிழ் ஜனம் சிறப்பாக விளக்கியுள்ளது என்றும் தேசத்தை மட்டும் முன்னிறுத்தும் தொலைக்காட்சி தமிழ்நாட்டுக்குத் தேவை என்றும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி யாருக்கும் போட்டியல்ல என அண்ணாமலை தெரிவித்தார்.
இதுவரை பொறுப்பும் கட்டுப்பாடும் இருந்தது, இனி free ஆக பேசுவேன் என்றும் கூட்டணி குறித்து கேள்வி கேட்டால் நயினார் நாகேந்திரனிடம் திருப்பி விடுவேன் என்றும் இனி பக்குவமாக பேச நயினார் நாகேந்திரன் உள்ளார் என்றும் எந்த பந்தை எப்படி ஆட வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார் என்றும் இனி சிக்ஸ்ர் அடிப்பது தான் நமது வேலை என அண்ணாமலை தெரிவித்தார்.