தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அண்ணாமலை நாதர் சுவாமி கோயில் சொத்துகளை ஆக்கிரமித்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இக்கோயிலுக்குச் சொந்தமான பாத்திமா நகர் பகுதியில் உள்ள நிலத்தைப் பலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக் கோயில் நிர்வாகம் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாகக் கருத வேண்டுமெனவும், அதற்கான சம்மதத்தை 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்பாளர்கள் 83 பேருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சுவாதீன நோட்டீஸ் வழங்கினர். முன்னதாக நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.