அனுமன் ஜெயந்தியையொட்டி ஹைதராபாத் கெளலிகுடா ராமர் கோயிலில் பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கெளலிகுடா ராமர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அனுமன் சாலிசா ஓதி மனமுருகி வழிபட்டனர்.
மேலும் அயோத்தி ராமர் கோயிலில் திரளான பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும் சரயு நதிக் கரையில் பக்தர்கள் புனித நீராடியும், பால் ஊற்றியும், பூக்கள் தூவியும் வழிபாடு நடத்தினர்.
அனுமன் ஜெயந்தியை ஒட்டி அயோத்தி ராமர் கோயிலில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.