பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாஜகவின் புதிய மாநில தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் கிஷண் ரெட்டி, எல்.முருகன் மற்றும் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் திரளான பாஜகவினரும் கலந்துகொண்ட நிலையில், புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி சான்றிதழை வழங்கிய முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கட்டி அரவணைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.