பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தேனிமலை கிராமத்தில் உள்ள முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை மாவட்ட சமூக நல அலுவலர் தெய்வநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தேனிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.