தேனி அருகே தனியார் பள்ளியில் நிர்வாக குழுவை சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருதரப்பினரிடைடே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில், பள்ளியின் தாளாளர் தலைமையிலான ஒரு குழுவினர் பள்ளிக்குள் சென்றனர்.
அப்போது பள்ளியை நிர்வகித்து வரும் மற்றொரு குழுவினர் ஹாக்கி மட்டையை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.