தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலம் மார்க்கெட்டில் பலா பழங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் கனி காணும் வைபவம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த கனி காணும் பூஜையில் மா, பலா, வாழை இடம்பெறுவது வழக்கமாக உள்ள நிலையில், பண்ருட்டியில் இருந்து சேலத்துக்கு 10 டன் பலாப் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டு சேலத்தில் மட்டும் 30 டன் பழங்கள் விற்பனையான நிலையில், தற்போது வரத்து குறைவால் பலாப் பழங்களின் விலை அதிகரித்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்து காணப்பட்டாலும், பூஜைக்காக பலாப் பழங்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.