விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் தரப்பிலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் பிறந்தநாள், நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் மாநில செயலாளர் ஷெரிப் சார்பில் அண்ணாசாலை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனவும், 2026-ன் துணை முதலமைச்சரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் விவகாரம் பேசுப்பொருளான நிலையில், மாநில செயலாளர் ஷெரிப்பிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.