விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி பங்கேற்ற விழாவில் முன்னாள் மற்றும் இன்னாள் எம்எல்ஏகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மறைந்த விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலை திறப்பு விழா அத்தியூர் திருவாதி கிராமத்தில் நடைபெற்றது.
கட்சி பதவி பறிப்புக்குப் பின் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், யார் முதலில் பேசுவது என்பதில் தொகுதி எம்எல்ஏ அன்னியூர் சிவா மற்றும் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.