உக்ரைனின் கிவ் நகரில், இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்திய வணிக நிறுவனங்களை ரஷ்யா திட்டமிட்டு தாக்குவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவுடன் சிறந்த நட்புறவு உள்ளதாக கூறும் ரஷ்யா, வேண்டுமென்றே இந்திய நிறுவனங்களை குறி வைத்து தாக்குவதாக, இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளின் இருப்புகளை, ரஷ்யா அழித்துள்ளதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.