அமைச்சர் பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவுக்கு பெண்கள் மீண்டும் வாக்களிக்க கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு மக்களுக்கு எந்த விதமான நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை என தெரிவித்தார்.
மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் மத்திய அரசே வழங்கி வருதாகவும் அவர் கூறினார். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“NDA கூட்டணி ஆட்சி அமையும்போது அனைத்து மாவட்டங்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் அமையும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.