அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுதுதுள்ள வாழ்த்து செய்தியில், சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தியவர், சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள். மிகுந்த கஷ்டங்களுக்கும், கொடுமைகளுக்கும் இடையில் அவர் நடத்திய போராட்டங்கள் ஈடு இணையற்றது. அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு பாடமாக திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் சமூகத்தினர் அனைத்து மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மீட்டெடுத்து நவீன இந்தியாவை உருவாக்க அம்பேத்கர் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்தவர், சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அவர் கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி செயலாற்றி வருவதாக கூறியுள்ளார்.
பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கையை கற்பதன் மூலமும் அவரது கொள்கைகளை பின்பற்றுவதன் மூலமும், வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்போம் என எல்.முருகன் கூறியுள்ளார்.