தமிழ் புத்தாண்டு இன்று கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.