இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கும் வகையில் அமெரிக்காவில் முதன்முறையாக சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை வெளிப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகைசெய்யும் சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்தனர்.
இந்துக்கள் மீதான வெறுப்பை தவிர்க்க இந்த புது சட்டத்தை அறிமுகம் செய்ததாகவும், இது தொடர்பாக மகிழ்வும், பெருமையும் கொள்வதாகவும் சபையில் தெரிவித்தனர். இந்த மசோதா, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும் என்று கூறினர்.
இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த சட்ட மசோதாவை பல்வேறு இந்து அமைப்புகளும், இந்துக்களும் வரவேற்றுள்ளனர்.