வார விடுமுறையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது.
புகழ்பெற்ற இக்கோயிலில் வார விடுமுறையை ஒட்டியும், பவுர்ணமி தினத்தை முன்னிட்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
கடலில் புனித நீராடிய பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக 7 மணி நேரமாகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
கடும் வெயில் வாட்டிய நிலையிலும் சுவாமி தரிசனத்திற்காகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.