சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாகக் கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கூட்டுறவுத்துறையில் மிகப்பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் பிரதமர் மோடி எனத் தெரிவித்தார்.