திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர்.
ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டன்று இந்த அபூர்வ நிகழ்வு அரங்கேறுவது வழக்கமாக உள்ளது. இதைக் காண்பதற்காக அதிகாலை 5 மணி முதலே காத்திருந்த பக்தர்கள், மனமுருகி அண்ணாமலையாரை வழிபட்டனர்.