ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி பல்வேறு தன்னார்வ அமைப்பினர் சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு உற்சாகத்துடன் ஓடினர்.
சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய மாரத்தான் போட்டி மீண்டும் அங்கேயே நிறைவடைந்தது.