குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
போதைப் பொருள் கும்பல் சர்வதேச எல்லையைத் தாண்டி படகில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக போர்பந்தருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடத்தலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.