டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலமாகக் கேரளா உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக ‘பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான்’ என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தை ‘டிஜி கேரளா’ எனும் பெயரில் கேரள அரசு முழு முயற்சியாக மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் அம்மாநிலத்தில் 21 லட்சம் மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.