கர்நாடகாவில் ஜீப்பில் சென்ற சுற்றுலா பயணிகளை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பெல்லூர் கிராமத்திற்கு கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஜீப்பில் சுற்றுலா சென்றனர். அவர்களில் ஒருவரை காட்டு யானை கொடூரமாக துரத்தி துரத்தி தாக்கியதால் உடன் வந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் கத்தி கூச்சலிட்டு காட்டு யானையை துரத்தியடித்தனர். பின்னர் படுகாயமடைந்த நபரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.