சென்னை வேளச்சேரியில் “குட் பேட் அக்லி” திரையிடப்பட்ட திரையரங்கில் இருக்கை உடைந்திருந்ததால் , ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை வேளச்சேரியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில்
’குட் பேட் அக்லி’ திரைப்படத்தைக் காண, 4 இளைஞர்கள் முன்பதிவு செய்திருந்தனர். குறிப்பிட்ட காட்சிக்காக அவர்கள் திரையரங்கினுள் சென்றபோது, இருக்கை உடைந்திருந்ததால் திரைப்படத்தைக் காண முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்களை திரையரங்க நிர்வாகம் வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
திரைப்படத்தைக் காண ஏற்பாடு செய்யாமல் வெளியேற்றப்பட்டதால் அதுகுறித்து இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, தாங்கள் குறிப்பிடும் மற்றொரு நாளில் வந்து திரைப்படத்தை காணுமாறு திரையரங்க ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.