பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
பெண்கள் குறித்தும், சைவ, வைணவ சமயங்கள் குறித்தும் அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் நீக்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், விழுப்புரம் திருக்கோவிலூர் பாஜக சார்பில் பொன்முடியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமான வாக்கியங்கள் இடம்பெற்றிருந்தன.