இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிசத் தர்ம யாத்திரா பொறுப்பாளர் சிவலிங்கம், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெறுப்பு உரையாற்றும் அரசு பிரபலங்கள் மீது தாமாகவே முன்வந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறினார்.
மேலும், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.