துருக்கியில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்தான்புல், திரேஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளிலும் பனி கொட்டி கிடப்பதால் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன.
இதனால் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வரலாறு காணாத பனிப்பொழிவால் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.