முர்ஷிதாபாத் கலவரத்தில் அனைத்து கட்சியினரும் அமைதியாய் இருப்பது ஏன் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பேசியுள்ள யோகி ஆதித்யநாத், மேற்கு வங்கம் பற்றி எரிவதாகவும், ஆனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி போன்ற கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.