வினோத் காம்ப்ளிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்ளி அதிகப்படியான குடிப்பழக்கம் காரணமாக அனைத்தையும் இழந்தார்.
ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தையே தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார்.
இந்த நிலையில், காம்பிளிக்கு வாழ்நாள் முழுவதும் 30 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுமென சுனில் கவாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி, காம்பளிக்கு உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுகிறது.