அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 150 இந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவாகரத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் உள்ள காட்டுக்கொல்லை கிராமத்தின் விவசாய நிலங்கள் வக்ஃப்-க்கு சொந்தமானது எனவும், உடனே இடத்தை காலி செய்யாவிட்டால் எங்களுக்கு வரி கட்ட வேண்டும் எனவும் சுமார் 150 இந்துக் குடும்பங்களுக்கு உள்ளூர் தர்கா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் கடும் கண்டனத்திற்குரியது.
இதுபோன்ற நிகழ்வுகளே நம் நாட்டில் வக்ஃப் சட்டத் திருத்தங்கள் ஏன் தேவைப்பட்டது என்பதற்கான சான்றினை வழங்குகிறது.
ஆகவே, பல தலைமுறைகளாக அந்த கிராமத்தில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சட்டவிரோதமாக துரத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அம்மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றால், அந்த கிராமத்திற்கு சென்று ஒரு மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க தமிழக பாஜக அஞ்சாது என்பதையும் திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.