புகார்தாரரை அவதூறாகப் பேசிய எஸ்.எஸ்.ஐ-யை கண்டித்த திருச்சி சரக டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அரியலூரில் பாலியல் புகார் தொடர்பாகப் பெண்ணை செல்போனில் எஸ்.எஸ்.ஐ ஒருவர் தரக்குறைவாக பேசிய ஆடியோவை திருச்சி சரக டிஜஜி வருண்குமார் வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து புகாருக்குள்ளான எஸ்.எஸ்.ஐ சுமதி என்பவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகக் காவலர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைத்து காவலர்களும் மிகுந்த மன உளைச்சலோடு பணியாற்றி வருவதாகவும், முழுமையாக விசாரிக்காமல் எஸ்.எஸ்.ஐ-யை டிஜஜி வருண்குமார் மிகவும் தரக்குறைவாகத் திட்டி உள்ளதாகவும் காவலர் குற்றம் சாட்டினார்.
ஐபிஎஸ் அதிகாரிகளுக்குச் சங்கம் இருக்கும் நிலையில், சாதாரண காவலர்களுக்கு எந்தவொரு சங்கமும் இல்லை எனவும் அவர் ஆதங்கம் தெரிவித்தார். மேலும், ஐபிஎஸ் என்றால் அண்ணாமலைபோல் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்