திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்ததால் இளைஞர் படுகாயமடைந்தார்.
ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த சபரி என்பவர் தனது வீட்டில் நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அவை திடீரென வெடித்ததால் சபரியின் கை விரல்கள் துண்டானதுடன், கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த பகுதியில் 2வது முறையாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.