இருட்டுக்கடை அல்வா கடையை வரதட்சணையாகக் கேட்டு தனது மகளின் கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கடையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடையின் உரிமையாளராக கவிதா சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், மாப்பிள்ளை வீட்டார் இருட்டுக் கடையை வரதட்சணையாகக் கேட்பதாகக் குற்றம் சாட்டியுள்ள கவிதா சிங், கடையை எழுதி வைக்க வலியுறுத்தி மாப்பிள்ளை வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், இதுகுறித்து திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்திலும், முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும் அவர் புகார் அளித்துள்ளார்.