தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க வலியுறுத்தி PMT மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு PMT மக்கள் இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்க வேண்டும் என்றும், சாதிய மோதல்களைத் தடுக்க புதிய தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பப்பட்டது.
இதேபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் PMT மக்கள் இயக்கம் அமைப்பினர் முழக்கமிட்டனர்.