பொது விஷயங்களில் தலையிட்டால் வரி விதிக்கப்படும் என நிதியுதவி நிறுத்திய பிறகு, ஹார்வர்டு பல்கலைக்கு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம், அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை ஊக்குவிப்பதாகக் கூறியுள்ள, அந்நாட்டு அதிபர் டிரம்ப், அதற்கு அளித்து வந்த, 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவியை நிறுத்தினார்.
தற்போது இன்னொரு மிரட்டல் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழகத்திற்கு என வரி விலக்கு உரிமை இருக்கிறது என்றும், பொது விஷயங்களில் தலையிட்டால் அது பறிக்கப்பட்டு வரி விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.