ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் கடந்த சில மாதங்களாகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பனி படர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் பலரும் சுற்றுலாத்தளங்களை விட்டுத் திரும்பி வர முடியாமல் சிக்கியுள்ளனர். ஸ்பெயினில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகரிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.