ஐ-போனுக்கு அடுத்தபடியாக ஏவுகணை, ஹெலிகாப்டர் மற்றும் போர்க்கப்பல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வங்கி மூலம் நீண்ட கால கடனுதவி அளிக்கவும் இந்தியா முடிவெடுத்துள்ளது.
கடந்த 2023-24-ஆம் ஆண்டுக் காலத்தில் 15 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை இந்தியா உற்பத்தி செய்தது. இது கடந்த 2020-இல் உற்பத்தி செய்யப்பட்டதை விட 62 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.