வேலூரில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தை வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலம் எனக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்களுக்குச் சொந்தமாக விவசாய நிலங்களை வைத்துள்ளனர்.
இந்த சூழலில் சையது அலி சுல்தான் என்பவரின் பெயரில், இங்கு வசிக்கும் மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலங்கள் வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது என்றும், பொதுமக்கள் இந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், 4 தலைமுறைகளாக தாங்கள் இங்கு வசித்து வருவதாகவும், அரசு இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.