தமிழக முஸ்லிம்கள் தவெக தலைவர் விஜய்யிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென இஸ்லாமிய மதகுரு மௌலானா சகாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபத்வா எனப்படும் இஸ்லாமிய சட்ட விதியில், மது அருந்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளை இஃப்தார் விருந்துக்கு அழைப்பது அனுமதிக்க முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
அத்தகைய நபர்களை இஸ்லாமியர்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும், அவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்க வேண்டுமெனவும் மௌலானா சகாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தியுள்ளார்.
அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விஜய் இஸ்லாமியர்களை பயன்படுத்திக் கொள்வதாக விமர்சித்த மௌலானா, அவரது பீஸ்ட் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களாக சித்தரித்ததை மேற்கோள்காட்டி உள்ளார்.