வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும் என்ற நிலையில்,
வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து நடைபெற்ற காரசார வாதத்துக்கு மத்தியில் குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் விரிவான பதில்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வக்ஃபு நிர்வாகக் குழுவில் நீதிபதிகள் நியமனம் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆகிய இடைக்கால உத்தரவுகளை இன்று பிற்பகல் வரை நிறுத்திவைத்தும் உத்தரவிட்டனர்.