நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மைசூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை, சிபிஐ-க்கு ஒப்படைக்க மறுத்த தீர்ப்பை எதிர்த்து, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், பிரதிவாதிகளான மத்திய அரசு, சிபிஐ, சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நிலத்தின் அசல் உரிமையாளர் தேவராஜு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.