சென்னை கொளத்தூர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியில் மெத்தபட்டமைன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஐசக் ராபர்ட் மற்றும் கொளத்தூர் பகுதியில் சேர்ந்த கல்லூரி மாணவர் ரித்தீஷ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணையின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கரண் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.