விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது.
மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2023ம் ஆண்டு மூடப்பட்டது. கோயிலை திறக்க வேண்டுமென இரு தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பட்டியல் சமூக மக்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து அதிகாலை கோயில் திறக்கப்பட்டு பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர். இதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.