ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் நல்ல முறையில் இருந்தாலும் மார்க்கெட்டில் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேவராஜ்நகர், பாலூத்து, டானாதோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மா விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.
இங்கு காய்க்கும் மாங்காய்கள் உணவு மற்றும் ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் நிலையில், கொள்முதல் விலை மிகவும் குறைவாக உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு 15 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக கூறியுள்ளனர்.
இதே விலைக்கு விற்றால் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும் எனக்கூறியுள்ள விவசாயிகள், கிலோவுக்கு 30 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.