ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆய்வு மையத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.
ஆய்வு மையம் அருகே 2 சிறுத்தைகள் சுற்றுத் திரிவதாக வந்த தகவலின் பேரில் அவற்றின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
சிறுத்தைகளைப் பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில் ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில் அதனை நேரு உயிரியல் பூங்காவுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.