திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி நடத்திய மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தேசிய கீதத்தைப் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி நடத்திய மாரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பரிசளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் தேசிய கீதம் பாடும் முன்பே மேடையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.